[ad_1]

கம்பளை நகரின் அம்பகமுவ வீதியில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் பெற்றோர் விடுமுறைக்கு கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களின் வீட்டிற்கு வந்திருந்த போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தாய் கடைக்கு சென்றுள்ளார்.

தாய் வீடு திரும்பி வந்து பார்த்தபோது சிறுவன் வீட்டில் இல்லாததால், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சிறுவனை தேடியுள்ளனர்.

பிரதேசவாசிகள் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் இறங்கி தேடிய போது கிணற்றில் தவறி விழுந்து மூழ்கியிருந்த சிறுவனை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, சிறுவனை உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் இதற்கு முன்னரும் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இன்று (15) மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

[ad_2]

Source link