[ad_1]




மதுராகொட அந்தபொல பிரதேசத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றே இவ்வாறு வெடித்துள்ளதாகவும், சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் ரிதிகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

51 வயதான தொடம்கஸ்லந்த பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சில காலமாக துப்பாக்கிகளை பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடி வந்தவர் எனவும், அவரால் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியொன்றே இவ்வாறு வெடித்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



[ad_2]

Source link