[ad_1]

சூரியவெவ, பத்தேவெவ மேற்கு பொல்பஹ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார், கள்ளக்காதலனால் நேற்று முன்தினம் (05) மாலை படுக்கையில் வைத்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சுரங்கிகா நடிஷானி (38) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயான இவரது கணவர் முச்சக்கர வண்டி சாரதியாவார்.

உயிரிழந்த பெண் மாத்திரம் மாலை 4.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் பிரவேசித்த நபர், படுக்கையில் வைத்தே பெண்ணை வெட்டிக் கொன்றார்.

கொலையாளி அதே பிரதேசத்தில் வசிப்பவர். அவர் உயிரிழந்த பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையின் பின்னர், சந்தேகநபர் சூரியவெவ பொலிஸாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த பெண்ணை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சூரியவெவ பொலிஸார் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் விடயத்தை அறிவித்ததையடுத்து, ஹம்பாந்தோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ஓஷத மிகர மஹராச்சி வந்து சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய நிபுணரிடம் சமர்ப்பித்து பிரேத பரிசோதனை செய்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் சூரியவெவ பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொலையை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

[ad_2]

Source link