[ad_1]
பொதுவாக உணவு பொருட்களை கெட்டுப்போகாமல் வைப்பதற்காக குளிர்சாதன பெட்டி பயன்படுத்தப்படுகின்றது.
இதில் உணவு மற்றும் காய்கறிகள் உட்பட பால், மாவு என பல்வேறு பொருட்களை சேமித்து வைக்கலாம்.
தற்போது இருக்கும் அவசர உலகில் குளிர்சாதன பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்று கூட கூறலாம்.
இவ்வளவு நன்மைகளை கொடுத்தாலும் குளிர்சாதன பெட்டியில் சில பொருட்களை தவறியும் வைக்கக் கூடாது என்பார்கள். மீறி வைக்கும் பொழுது உணவின் பண்பில் மாற்றம் ஏற்படும்.
அந்த வகையில், குளிர்சாதனப் பெட்டியில் எந்தெந்த பொருட்களை வைக்கலாம்? என்னென்ன பொருட்களை வைக்கக் கூடாது? என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
குளிர்சாதனப் பெட்டி
1. ஒரு போதும் குளிர்சாதனப் பெட்டியில் உரித்த பூண்டு வைக்கக் கூடாது. அதுமட்டுமன்றி பூண்டு வெளியில் வைக்கலாம். குளிர்சாதன பெட்டியில் மாத்திரம் தான் வைக்கக் கூடாது. இதனை மீறும் பட்சத்தில், பூண்டின் குணநலத்தில் மாற்றம் ஏற்படும்.
2. பொதுவாக வெங்காயம் குறைந்த வெப்பநிலையைத் தாங்கும். இதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொழுது மாவுச்சத்து சர்க்கரையாக மாறத் தொடங்கும். மேலும், நச்சுத்தன்மையாக மாறவும் வாய்ப்பு இருக்கின்றது.
3. உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான மூலிகைப் பொருட்களில் இஞ்சியும் ஒன்று. இதனை வெளியில் வைத்தால் கூட குணம் மாறாமல் இருக்கும்.
4. அரிசியை எக்காரணம் கொண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. அரிசி மட்டுமன்றி மாவுச்சத்து கொண்ட எந்த பொருளையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கூடாது.
5. பழைய சாதம், குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுக்கப்படும் உணவுகளை மீண்டும் சூடு பண்ணும் பொழுது அது ஆரோக்கியத்தில் மாற்றத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
இது போன்று வெள்ளரி, உருளைக்கிழங்கு, ஆப்பிள், வாழைப்பழம், வாழைத்தண்டு, பெர்ரிப் உள்ளிட்ட பழங்ளையும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது, இது நச்சுத்தன்மையாக மாறலாம்.
[ad_2]
Source link