[ad_1]

ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை தமிழ் சினிமா வட்டாரத்தில் கடந்த பல மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று. அதற்கு சமீபத்தில் நடந்த லால் சலாம் பட விழாவில் ரஜினி முற்றுப்புள்ளி வைத்தார்.

விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன் என கூறிய ரஜினி, விஜய் கடின உழைப்பால் உயரத்தில் இருக்கிறார், அடுத்து அரசியலில் இறங்குகிறார் அதற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்து இருந்தார்.

மேலும் ரஜினி நேற்று ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசும்போது விஜய் அரசியலில் நுழைந்திருப்பது பற்றி கேட்டதற்கு ‘வாழ்த்துக்கள்’ என ஒரே வார்த்தை மட்டும் தெரிவித்து இருந்தார்.

போன் செய்த விஜய்
இந்நிலையில் இன்று விஜய் ரஜினிக்கு போன் செய்து பேசி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அரசியலில் நுழைந்ததற்கு வாழ்த்துக்கள் சொன்னதற்காக நன்றி கூறி இருக்கிறார் விஜய்.

[ad_2]

Source link