[ad_1]

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு பதிவாகியுள்ளது. மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. 62 அகவையுடைய பொன்னுச்சாமி செல்வரூபான் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு தொடர்பில் தாக்குதலை மேற்கொண்ட மருமகனை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

[ad_2]

Source link