[ad_1]

ஜெபம் மூலம் மனநோயை குணப்படுத்தலாம் என மத போதகரால் அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த 38 வயதான பெண்ணை, ஜெபம் மூலம் குணப்படுத்தலாமென குறிப்பிட்டு, போதகர் ஒருவர் அழைத்துச் சென்று, தங்க வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், உணவு நஞ்சானதாக குறிப்பிட்டு அந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

[ad_2]

Source link