[ad_1]

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த தாயும் மகளும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்ற 37 வயதான இளைஞன் அப்பகுதியில் உள்ள காணியொன்றில் வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு சம்பவத்திற்கும் காதல் விவகாரமே காரணம் என தெரிவித்த இளவாலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தாய், மகளை வெட்டி விட்டு இளைஞன் விபரீத முடிவு.. யாழ்ப்பாணத்தில் சம்பவம்.! appeared first on Tamil Seithi.

[ad_2]

Source link