[ad_1]

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த ஒட்டிபிறந்த இரட்டையர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ் 62வயதுடைய இரட்டையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 1961ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாக இருவரும் ஒட்டிபிறந்துள்ளனர்.

கின்னஸ் சாதனை
பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய இரத்த நாளங்கள் மற்றும் 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது உயிரிழந்துள்ளனர்.

இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்துள்ளமை சிறப்பம்சமாகும்

மேலும் கடந்த 2007ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனையை தனதாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் நிறுவனம் உட்பட உலக அமைப்புகள் பலவும், இரங்கல் தெரிவித்து வருகின்றன.

[ad_2]

Source link