[ad_1]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சற்று உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.54 ரூபாயாகவும், கொள்வனவு விலை 294.20 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 221.33 ரூபாயாகவும், கொள்வனவு விலை 211.66 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 323.89 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 310.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 378.87 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 363.79 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுதியானது படிப்படியாக 290 ரூபாயை நெருங்கி வருகின்றது.

இலங்கையில் இன்று (16) மத்திய வங்கி வெளியிட்ட நாணயமற்று விகிதம் கீழே இணைக்கப்படுள்ளது.

[ad_2]

Source link