[ad_1]
14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை காத்தான்குடி பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர் .
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தைச் சேர்ந்த 14 வயதான மாணவியை காதலித்து, கடத்திச் சென்ற திருகோணமலை குற்றவெளியைச் சேர்ந்த 17 வயது சிறுவனனே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை கடத்தி சென்ற சிறுவன் கொழும்பில் சில நாட்கள் தங்கி இருந்தபின் மீண்டும் சொந்த இடத்துக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வீட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் சிறுவனை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும், மாணவியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதித்துள்ளதாகவும், காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்னர்..
[ad_2]
Source link