[ad_1]

வெளிநாட்டு கடனை செலுத்தாதிருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“மச்சான் கடனை மறந்து விடுவோம் என வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 100 பில்லியன் டொலர் கடனை தவிர்த்து விட முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரின் சமுர்த்தி வங்கி கூட கடன் செலுத்தாவிட்டால் வழக்குத் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

100 பில்லியன் டொலர்
எனவே கடனை செலுத்தாமலிருக்க முடியும் என மக்களுக்கு நகைச்சுவை கதைகளை கூற முடியாது அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் கல்வித்துறையை ஆங்கில மொழியை மையமாகக் கொண்டதாக வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு திறன் பலகைகளை வழங்கும் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

[ad_2]

Source link