[ad_1]
வவுனியாவில் (Vavuniya) மதுபோதையில் தனியார் பேருந்தினை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இந்நிலையில், வவுனியா மாவட்டத்திலும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய குற்றச்சாட்டில் தனியார் பேரூந்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பேருந்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும், சாரதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ad_2]
Source link