[ad_1]
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (15.04.2024) மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், மின்னல் தாக்கங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
[ad_2]
Source link