[ad_1]

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

புதுவருட தினமான நேற்று இரவு 8.30 மணியளவில் குறித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரிப் பகுதியில் இருந்து தனது இரண்டு பேரக் குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்த பேரன், மகிழங்கேணிப் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளையில்,

பின்பக்கமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு குழந்தைகள் மற்றும் வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் மதுப்போத்தல்கள் வீழ்ந்து கிடந்த நிலையில், சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

[ad_2]

Source link