[ad_1]

தெல்தெனிய கும்புக்கந்துர பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

திஹாரிய பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட தம்பதியினர் தெல்தெனிய பகுதியிலுள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதான கணவனும் 22 வயதான மனைவியுமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவதற்காக நீர்த்தேக்கத்தில் குதித்த திகனை அளுத்வெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

[ad_2]

Source link