[ad_1]
திருகோணமலை – சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் சேறுநுவர கல்வல சந்தியில் வசித்து வந்த 41 வயதுடைய எம்.ஜீ. சஞ்சீவ கருணாரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..
அனுராதபுரம் கண்னேவ பகுதியில் வசித்து வந்த திருமணமான சம்பிகா குமாரி என்பவர் கணவரை விட்டு பிரிந்து திருகோணமலை சேறுநுவர பகுதியில் மற்றுமொரு நபருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் முதலாவது கணவர் மனைவியை தேடி வந்து மனைவியுடன் வாழ்ந்து வந்த குறித்த நபரை கத்தியால் குத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் சம்பவ இடத்தில் காணப்படுவதுடன், சடலத்தை பார்வையிட மூதூர் நீதவான் வருகை தந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post கள்ளக்காதலால் ஒருவர் ப.டு.கொ.லை – திருகோணமலையில் சம்பவம்.! appeared first on Tamil Seithi.
[ad_2]
Source link