[ad_1]
இன்று புஸ்ஸல்லாவ ஹெல்பொட பிரதேசத்தில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 2 வயது குழந்தையும் 70 வயது முதியவர் ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 04 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் விபத்துக்கு உள்ளான வேன் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு பத்து பேருடன் சுற்றுலாவுக்கு வருகைதந்து பின் கொழும்பை நோக்கி பயணிக்கையில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம் விபத்தில் வேனில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பிரதேச மக்கள்,பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் ஹாலிஎல, பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காரொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[ad_2]
Source link