[ad_1]

அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கீழே இருந்த தண்ணீர் குழாயில் நீராடி கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் உடலில் நீர் தாங்கி வீழ்ந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

ருஹுணுகம பிரதேசத்தில் வசித்து வந்த 03 வயதும் 07 மாதங்களுமான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (14) இடம்பெறவுள்ளது.

[ad_2]

Source link