[ad_1]

“என்னுடைய ஆடைகளைக் களைந்து, நாற்காலியில் அமரவைத்து, என் காலில் மின்சாரம் பாய்ச்சினார்கள். இது என் வாழ்க்கையின் முடிவு என்று நினைத்தேன்.”

“நான் அவர்களுக்குக் கீழ்ப்படியாததால் நான் 16 நாட்கள் சிறிய அறையில் தங்க வேண்டியிருந்தது. அவர்கள் எனக்கு குடிக்க சிகரெட் மற்றும் சாம்பல் கலந்த தண்ணீரை மட்டுமே கொடுத்தனர்”

இது மியான்மரில் அமைந்துள்ள சைபர் கிரைம் முகாமில் சிக்கிக்கொண்ட நிலையில், மீட்கப்பட்ட 24 வயதான இலங்கையரான மென்பொருள் பொறியியலாளர் ரவி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தெரிவித்த கருத்தாகும்.

பிபிசிக்கு அளித்த விசேட செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த “சைபர் அடிமை” முகாமானது மியான்மர் இராணுவ அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத பகுதியான மியாவாடி காட்டில் அமைந்துள்ளது.

ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கணினி தொடர்பான வேலைகள் என்ற வாக்குறுதியுடன் இந்த முகாமுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இங்கு பணிக்கு வந்த பிறகு இணங்க மறுப்பவர்கள் தாக்கப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

“நான் அவர்களுக்குக் கீழ்ப்படியாததால் நான் 16 நாட்கள் சிறிய அறையில் தங்க வேண்டியிருந்தது. அவர்கள் எனக்கு குடிக்க சிகரெட் மற்றும் சாம்பல் கலந்த தண்ணீரை மட்டுமே கொடுத்தனர்” என்று ரவி பிபிசியிடம் கூறினார்.

“ஐந்தாவது அல்லது ஆறாவது நாளில், நான் அறையில் இருந்தபோது, ​​​​இரண்டு சிறுமிகள் அருகிலுள்ள மற்றொரு அறைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் என் கண் முன்னே 17 ஆண்களால் கற்பழிக்கப்பட்டனர்,” என்றும் ரவி தெரிவித்துள்ளார்.

மியான்மரில் நான்கு இடங்களில் சிக்கியுள்ள 56 இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இலங்கை அதிகாரிகள் அறிந்துள்ளனர், அவர்களில் 8 பேர் சமீபத்தில் மியான்மர் அதிகாரிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கணினி நிபுணரான ரவி, பொருளாதார நெருக்கடியால் நாட்டை விட்டு வெளியேறி பாங்காக்கில் வேலைதேடியுள்ளார். அதன்படி 370,000 என்ற அடிப்படை சம்பளத்தில் வேலையும் கிடைத்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ரவியும் இலங்கையர்களின் குழுவும் முதலில் பாங்காக்கிற்கும், பின்னர் தாய்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள மே சோட் நகரத்திற்கும் அனுப்பப்பட்டனர்.

“நாங்கள் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம், ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு எங்களை இரண்டு துப்பாக்கிதாரிகளிடம் ஒப்படைத்தனர், அவர்கள் எங்களைமியான்மருக்கு அழைத்துச் சென்றனர்” என்று ரவி கூறினார்.

பின்னர் அவர்கள் சீன மொழி பேசும் கும்பலால் நடத்தப்படும் முகாமுக்கு அழைத்துச்சென்றனர், மேலும் படங்களை எடுக்க வேண்டாம் என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டனர்.

“நாங்கள் பயந்தோம். இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள், பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆண்களும் பெண்களும் அந்த முகாமில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

உயரமான சுவர்கள் மற்றும் முட்கம்பிகள் இந்த முகாமில் இருந்து தப்பிப்பதைத் தடுத்ததாகவும், துப்பாக்கி ஏந்தியவர்கள் எல்லா நேரங்களிலும் வாயில்களை பாதுகாப்பதாகவும் ரவி கூறினார்.

ரவியின் கூற்றுப்படி, அவரும் மற்ற குழுவினரும் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், மேலும் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே விடுமுறை கிடைத்தது.

கீழ்ப்படியாதவர்கள் அடி மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்நிலையில், பெரும் தொகை பணத்தை செலுத்தியே மோசடி கும்பலிடம் இருந்து ரவி தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[ad_2]

Source link