[ad_1]

பாகிஸ்தானின் 12வது பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (08) நடைபெறவுள்ளது.

128 மில்லியன் வாக்காளர்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (07) தேர்தலுக்கு ஒருநாளே இருந்த வேளையில் இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இரண்டு தேர்தல் வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் தேர்தல் அறிவித்த காலப்பகுதியில் இருந்தே அவ்வப்போது வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post பாகிஸ்தானில் இன்று பொதுத் தேர்தல் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

[ad_2]

Source link